ஒன்று, இரண்டு, மூன்று.. அய்யோ! ஒரு நம்பரை காணவில்லையே? எதுன்னு கண்டுபிடிங்க....!!!







இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 1, 2, 3,... என 52 வரை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வரிசையாக கொடுக்கப்பட்டுள்ள இந்த எண் வரிசையில் ஒரே ஒரு எண் மிஸ் ஆகியுள்ளது. அந்த எண் எது என்பதை 5 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்.


கண்கட்டி வித்தை என்று சொல்லப்படும், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் இருக்கும். இந்த ஒளியியல் மாயை படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன் மற்றும் புத்திக்கூர்மை ஆகியவற்றை சோதிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன. இதனால், இத்தகைய இல்யூஷன் படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.


அந்த வகையில் இன்று இணையத்தில் ஒரு வித்தியாசமான ஆப்டிகல் இல்யூஷன் படம் டிரெண்டாகி வருகிறது. சற்று வித்தியாசமான புதிர் வகையிலான இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரே ஒரு எண் மட்டும் விடப்பட்டுள்ளது. இதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான டாஸ்க். பள்ளி காலத்திலேயே இதெல்லாம் நாங்க ஈசியா கண்டுபிடிச்சிடுவோம். இதெல்லாம் ஈசியா கண்டுபிடிச்சிடலாம் என நினைக்கிறீர்களா..


ஆனால் அங்கதான் ஒரு ட்விஸ்ட் இருக்கு. வெறும் 5 செகண்ட் தான் டைம். அதற்குள் விடுபட்ட எண்ணை கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.. 1,2,3,4,5... ஒகே டைம் முடிந்தது. பலரும் விடுபட்ட எண்ணை குறிப்பிட்ட டைமிற்குள் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்பலாம். அப்படி கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் உண்மையாகவே ஜீனியஸ் தான். நீங்கள் கவனிப்புத்திறன் அபராமாக உள்ளது.


உங்கள் மூளை படு சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. அதெல்லாம் இருக்கட்டும்.. விடையை கண்டுபிடிக்க முடியவிலலை என நினைப்பவரா நீங்கள்.. உங்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம். அதாவது டைம் லிமிட்டை மறந்து விடுங்கள்.. அவசரம் இன்றி நிதானமாக படத்தை பாருங்கள் இப்போது எளிதாக விடை உங்கள் கண்களுக்குள் சிக்கிவிடும்.

இப்போதும் தெரியவில்லையே என நினைக்கிறீர்களா.. வரிசையாக ஒவ்வொரு வரிசையிலும் இருந்து ஏறுமுகத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் எண்களை படித்து பாருங்கள்.. இப்போது 32 என்ற அந்த விடுபட்ட எண்ணை நீங்கள் கண்டுபிடித்து இருக்கலாம்.. ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் தினமும் புதிது புதிதாக இணையத்தில் பரவி வருகின்றன. பொழுதுபொக்கு மட்டுமின்றி சவால் நிறைந்ததாகவும் இந்த படம் இருப்பதால், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.