அரசு பள்ளி மாணவர்களுக்கான மாலை சிற்றுண்டி திட்டம் – இன்று முதல் அமல்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாலை சிற்றுண்டி திட்டம் – இன்று முதல் அமல்!


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாலை சிற்றுண்டி:

தமிழகத்திலேயே முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை சிற்றுண்டி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, பல்வேறு மாநில அரசுகளும் இந்த திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாலை வேளையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்திருந்தது.

அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் மாலை சிறுதானிய சிற்றுண்டி திட்டம் இன்று (பிப்.16) முதல் அமலுக்கு வருகிறது. அதாவது, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் திணை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்கள் அடங்கிய இரண்டு கிராம் அளவிலான பிஸ்கட் மற்றும் மிட்டாய் வழங்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக மாநிலத்தில் 486 பள்ளிகளில் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த புதிய திட்டத்தினால் கிட்டத்தட்ட 86,000 மாணவர்கள் பயனடைவார்கள்.


Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2