TNPSC பொதுத்தமிழ் – ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளையறிதல்

ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளையறிதல் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும்.  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். 


அ  – அந்த, சுக்கு, திப்பிலி, எட்டு

ஆ – பசு, ஆச்சாமரம், சிவஞானம், இச்சை

இ  – சுட்டு (அங்கே, அவன்), இந்த, அன்பு, ஆச்சரியம்

ஈ  – அம்பு, குகை, இலட்சுமி, கடவுள், தா, ஈ,தேனீ, வண்டு,பாம்பு

உ – சிவன், பிரமன், சிவசக்தி, இரண்டு

ஊ – உணவு, இறைச்சி, சிவன், உண்ணல்

எ – எந்த, ஏழு எண்ணும் எண்ணின் குறி

ஏ – அம்பு, விளி, இடைச் சொல்,எதிர்மறைப்பொருள், சிவன், திருமால்

ஐ – அழகு, அரசன், தலைவன், கடவுள், குரு,சிவன், தும்பை, பருந்து, வியப்பு

ஒ – நிகர், பொருந்து

ஓ – வினா, வியப்பு,ஆபத்து, ஒழிவு

ஓள – பூமி, ஆனந்தம்,கடித்தல்

க – ஒன்று, அரசன், ஆன்மா, உடல், காற்று,பிரமன்

கா – சோலை, காவடி,காவல், தொலை

கீ – கிளிக்குரல்

கு – குற்றம், சிறுமை

கூ – கூகை, பூமி, கூவு, அழுக்கு, பிசாசு

கை – இடம், பகை, கரம், ஒழுக்கம், கரம், துதிக்கை, வரிசை, ஒப்பனை, அளவு,கைமரம்

கோ – அரசன், அம்பு, சூரியன், சந்திரன், நீர், சொர்க்கம்,ஆண்மகன், பூமி, ஆகாயம், பசு,மலை

கௌ – மனத்தாங்கல், தீங்கு, கொள்ளு, பற்றுதல்

ச – சக

சா – மரணம், இறப்பு, போ,பேய்,கெடுதல்

சீ – அலட்சியம், அடக்கம், இகழ்ச்சி, புண்சீழ்,பார்வதி, இலட்சுமி, கலைமகள், சிதல்

சு – சுய, சுகம்

சே – எருது, மரம், தூரம், உயர்வு, சிவப்பு

சை – இகழ்ச்சி,செல்வம்

சோ – அரண், நகரம், ஒலி, உமை

சௌ – சௌபாக்கியவதி (சுமங்கலி)என்பதன் சுருக்கம்

ஞா – சுட்டு, பொருந்து

ஞை – இகழ்ச்சி

த – பிரம்மா, குபேரன்

தா – வருத்தம், பகை, வலிமை, கெடுதி,கொடு,குற்றம், தாண்டுதல்

தீ – நெருப்பு, அறிவு, நரகம், கொடுமை, கோபம்,இனிமை

து – கெடு, வருத்து, பிரிவு

தூ – தூய்மை, பகை, தடை, வலிமை, சிறகு,வெண்மை

தே – தெய்வம், நாயகன், கருணை,அருள்

தை – தைத்திங்கள், அலங்கரி, தையல், மகரராசி,தாளம்

நா – நாக்கு, திறப்பு, அயலார்

நி – உறுதி, அருகில், விருப்பம், நிச்சயம், இன்மை

நீ – முன்னிலைப்பெயர், தீங்கு, விடு

நு – தோணி, தியானம், ஆயுதம்

நூ – எள், யானை, ஆபரணம்

நே – அன்பு, நேயம், ஈரம்

நை – வாடு, இரங்கு, தளர்தல், வருந்து

நொ – துக்கம், இல்லை, நோய், வலி, பலமின்மை

நௌ – மரக்கலம்

ப – காற்று, இருபதில் ஒன்று, பின்னம், காற்று, சாபம், குடித்தல்

பா – பாட்டு, நிழல், அழகு, பாடல், நூல், பரப்பு

பி – அழகு

பீ – அச்சம், மலம், தொண்டி

பூ – மலர், இடம், அழகு, பொலிவு, கூர்மை, பூமி,இலை

பே – நுரை, மேகம், இல்லை

பை – பசுமை, பாம்பின்படம், சாக்கு, அழகு,குடற்பை,நிறம்

போ – போதல், செல்

ம – காலம், சந்திரன், எமன், பிரமன், விஷ்ணு ,சிவன், அசோக மரம்

மா – மாமரம், வலி, விண்டு, வயல், பெரிய,அழகு,அன்னை, கருமை, அழைப்பு, இலட்சுமி, குதிரை, விலங்கு

மீ – பெருமை, மேல்புறம், உயர்வு, மேலே, வானம்

மூ – மூன்று, மூப்பு

மே – அன்பு, மேம்பாடு, மேன்மை

மை – குற்றம், மலடி, மேகம்,நீர்,கருமை, அஞ்சனம், ஆடு

யா – ஐயம், இல்லை, யாவை, ஒரு மரம்,வினா

வா – வருக

வி – உறுதி, அறிவு, பிரிவு

வீ – பூ, பறவை, நீக்கம், சாவு

வே – வேவு, உளவு, ஒற்று

வை – கீழே வைத்தல், வைக்கோல், கூர்மை

வெள – திருடுதல், கொள்ளையிடல், பிடித்தல்