3 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – அரசு அறிவிப்பு!!

 3 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – அரசு அறிவிப்பு!!


ஒடிசா மற்றும் கேரள மாநிலத்தில் ஜனவரி 27ஆம் தேதியையும் சேர்த்து மொத்தமாக தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை:

ஒடிசா மாநிலத்தில் உள்ள சமலேஸ்வரி கோயில் பகுதி மேலாண்மை மற்றும் உள்ளூர் பொருளாதார முயற்சிகள் (SAMALEI) என்னும் திட்டத்தை வரும் ஜனவரி 27ஆம் தேதி முதல்வர் நவீன் பட்நாயக் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்தக் கோயில் விழாவிற்கான சடங்குகள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமலேஸ்வரி கோயில் திறப்பு விழாவை ஒட்டி வரும் ஜனவரி 27ஆம் தேதி மாநிலத்திற்கு அரசு விடுமுறை என முதல்வர் அறிவித்துள்ளார்.

அதேபோல, கேரளா மாநிலத்திலும் வரும் ஜனவரி 27ஆம் தேதி ஆசிரியர் கிளஸ்டர் கூட்டம் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம், ஜனவரி 27 ஆசிரியர் கிளஸ்டர் கூட்டம் என்பதனால் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சனிக்கிழமை 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை எனவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2