குரூப் 2A தேர்வின் தரவரிசை பட்டியல் விவரங்கள் – மார்ச் மாதம் வெளியீடு!

குரூப் 2A தேர்வின் தரவரிசை பட்டியல் விவரங்கள் – மார்ச் மாதம் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வின் தரவரிசை பட்டியல் குறித்த விபரங்களை வெளியிடுவது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டி என் பி எஸ் சி குரூப் 2 :

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2A பணிகளுக்கு நேர்காணல் மற்றும் நேர்காணல் இல்லாத நேரடி பணி நியமன தேர்வுகளை கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி முதல் நிலை தேர்வை நடத்தியது. தேர்வில் கலந்து கொண்ட மொத்த நபர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றனர். மெயின் தேர்வுகள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகள் பல மாதங்களாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில் பல கட்ட கோரிக்கைகளுக்கு பின்னர் ஜனவரி 12, 2024ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களில் 161 காலி இடங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த வாரம் நடத்தப்பட்டது. மீதமுள்ள 5900 இடங்களுக்கு கவுன்சிலிங் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சியின் செயலாளர் கோபால் சுந்தர்ராஜ் குரூப் 2 பதவிகளுக்கு நேர்காணல் முடிந்து விட்டதாகவும், 2A பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு இல்லாத இடங்களுக்கான தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தரவரிசை ஆனது மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.Post a Comment

0 Comments