அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு..தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை..!

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு..தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை..!

நாளை (11.12.2023) முதல் தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கவிருந்தது. 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனால், 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு நாளை (11.12.2023) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் மாணவர்களின் புத்தகங்கள் உள்ளிட்ட உடமைகள் சேதமடைந்தன.

பள்ளிகள் நாளை திறக்கவுள்ள நிலையில்,  மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மீண்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் புதன்கிழமை (13.12.2023) தமிழகம் முழுவதும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதன்கிழமை தொடங்கும் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2