திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு..!

 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு..!


நிர்வாக காரணங்களால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான நவம்பர் செமஸ்டர் தேர்வுகள், டிசம்பர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தவிர்க்கவியலாத சில நிர்வாகக் காரணங்களால் அத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு அட்டவணை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments