"ரூ.6,000 நிவாரண தொகைக்கான டோக்கன் டிச.16 முதல் வழங்கப்படும்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு ..!

"ரூ.6,000 நிவாரண தொகைக்கான டோக்கன் டிச.16 முதல் வழங்கப்படும்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு ..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் வரும் 16ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலின் தாக்கம் காரணமாக பெய்த பெரு மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் தலா 6 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

எப்போது பணம் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments