16ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - அடுத்த 3 மணிநேரம் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்..!

16ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - அடுத்த 3 மணிநேரம் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்..!

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.


ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


முன்னதாக சென்னை வானிலை மையம் நேற்று  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ளது.

 

Post a Comment

0 Comments