பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி – டிசம்பர் 13..!

 பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி – டிசம்பர் 13..!


திருப்பூா் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பெண்களுக்கான இலவச அழகுக் கலைப் பயிற்சிக்கான நேர்காணல் புதன்கிழமை (டிசம்பா் 13) நடைபெறவுள்ளது.

இது குறித்து அனுப்பா்பாளையம் கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூா் அனுப்பா்பாளையத்திலுள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச அழகுக் கலைப் பயிற்சி வகுப்புக்கான நேர்காணல் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இதில், எழுத, படிக்கத் தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 30 நாள்கள் நடைபெறும் இந்த முழு நேரப் பயிற்சிக்கு எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா் -641652 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும்.

முதலில் வருவோா்க்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923, 99525-18441, 86105-33436 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2