விவசாய பட்டதாரிகளுக்கு இலவச தொழில் திறன் பயிற்சி..!!

 விவசாய பட்டதாரிகளுக்கு இலவச தொழில் திறன் பயிற்சி..!!

தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம் சார்பில் விவசாய பட்டதாரிகளுக்கு இலவச தொழில்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது

பி.எஸ்சி. விவசாயம், கால்நடை, வனத்துறை, தோட்டக்கலை, மீன்வளத்துறை, வேளாண் பொறியியல் பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள் 60 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

நாட்டுக்கோழி, காளான், தேனீ, வெள்ளாடு, நன்னீர்மீன் வளர்ப்பு, பால்பண்ணை, பழமரக்கன்று, காய்கறி செடி வளர்த்தல், காய்கறி, பழங்களை பதப்படுத்துதல், சேமிப்பு கிட்டங்கி அமைத்தல், விவசாயப் பொருட்கள் விற்பனை நிலையம், இயற்கை விவசாயம், வேளாண் கருவிகளை வாடகைக்கு விடுதல் போன்ற தொழில்களில் செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.தனிநபர் தொழில் தொடங்கினால் ரூ.20 லட்சம், கூட்டாக தொடங்கினால் ரூ.ஒரு கோடி வரை கடன் பெறலாம். பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 44 சதவீதம், மற்றவர்களுக்கு 36 சதவீத மானியம் உண்டு என திட்ட அலுவலர் சுப்புராஜன் தெரிவித்துள்ளார்.

முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம், நெல் மற்றும் பூ மார்க்கெட் வணிக வளாகம், மாட்டுத்தாவணி, மதுரை, அலைபேசி: 94860 19477.

Post a Comment

0 Comments