மீன்வளத்துறை மாணவர்களுக்கு IAS தேர்வுக்கு இலவச பயிற்சி..!!

 மீன்வளத்துறை மாணவர்களுக்கு IAS தேர்வுக்கு இலவச பயிற்சி..!!

நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டு தோறும், 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, ஐ.ஏ.எஸ்., போட்டி தேர்வில் கலந்து கொள்ள வசதியாக பிரத்யேக பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கியுள்ளது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும், 18 வரை கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

அவர்கள் பெற்றிடும் பதிவு எண் மற்றும் உரிய ஆவணங்களை மேட்டூரில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பவர்கள் மட்டுமே பயிற்சிக்கான நுழைவுத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர்.

மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், மேட்டூர் அணை பூங்கா எதிரில், கொளத்தூர் சாலை, மேட்டூர் அணை – 636 401, தொலைபேசி எண் 04298- 244045 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments