TNPSC tamil (Thodarum Thodarpum arithal )– தொடரும் தொடர்பும் அறிதல் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்..
இலக்கியங்களைப் படைத்தோர்களை சில சிறப்புப் பெயர்களால் அழைப்பது தமிழ் மரபு தமிழறிஞர்களின் சிறப்புப் பெயர்கள் அவர்களின் செயல் மற்றும் படைப்புகளால் வழங்கப்படுகிறது.
இப்பகுதி வினாக்கள் பொதுவாக நேரடி வினாக்களாக அமைக்கப்படுகின்றன. அதற்கேற்ப தமிழறிஞர்களின் சிறப்புப் பெயர்கள் மற்றும் அவர்களது மேற்கோள்களையும் தேர்வு நோக்கில் அவசியமானதை தொகுத்துள்ளோம். எனவே இவற்றை நன்கு படித்து மனதில் நிறுத்திக் கொண்டால் இப்பகுதியிலிருந்து வரும் வினாக்களுக்கு முழு மதிப்பெண்களையும் பெற்றுவிடலாம் என்பது திண்ணம்.
தமிழறிஞர்களின் சிறப்புப் பெயர்கள்
திருவள்ளுவர்
- தெய்வப்புலவர்
- நான்முகனார்
- மாதானுபங்கி
- சென்னாப்போதகர்
- பெருநாவலர்
- பாயில் புலவர் நாயனார்
- தேவர்
- முதற்பாவலர்
இராமலிங்க அடிகள்
- வள்ளலார்
- அடிகளார்
திருநாவுக்கரசு
- ஆளுடையரசு
- மருள் நீக்கயார்
- அப்பர்
திருஞானசம்பந்தர்
- ஆளுடையப்பிள்ளை
- திராவிட சிசு
காரைக்கால் அம்மையார்
- பேயார்
கபிலர்
- குறிஞ்சிக்கோமான்
- கவிச்சக்கரவர்த்தி
- கல்வியில் பெரியவர்
சேக்கிழார்
- தொண்டர் சீர் பரவுவார்
ஆண்டாள்
- சூடிக்கொடுத்த சுடர்கொடி
- வைணவம் தந்த செல்வி
பண்டிகை அசலாம்பிகை
- 20-ம் நூற்றாண்டு ஒளைவயார்
நச்சினார்க்கினியர்
- உச்சிமேற்கொள் புலவர்
பெருஞ்சித்திரனார்
- பாவலர் ஏறு
தேவநேயப்ப பாவாணர்
- மொழிஞாயிறு
வீரகவிராயர்
- அந்தக்கவி
காளமேகப்புலவர்
- ஆசகவி
திரு.வி.க.
- தமிழ்தென்றல்
- தமிழ் முனிவர்
- தமிழ் பெரியார்
- தொழிலாளர்களின் தந்தை
சி.சுப்பிரமணிய பாரதியார்
- தேசிய கவி
- விடுதலைக் கவி
- மகாகவி
- பாட்டுக்கொரு புலவன்
- புதுக்கவிதை தந்தை
சுப்பு இரத்தினதாசன்
- பாவேந்தர்
- பாரதிதாசன்
- புரட்சிக் கவிஞர்
- இயற்கைக் கவிஞர்
- புதுமைக் கவிஞர்
உ.வே.சாமிநாதையர்
- தமிழ்தாத்தா
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- நவீன கம்பர்
புதுமைப்பித்தன்
- சிறுகதை மன்னன்
- தமிழ்நாட்டின் மாப்பாசான்
கல்கி இரா.கிருஷ்ண மூர்த்தி
- சிறுகதையின் தந்தை
- வரலாற்று நாவலின் தந்தை
- தமிழ்நாட்டின் வால்ட்டர் ஸ்காட்
சோமசுந்தர பாரதியார்
- நாவலர்
அறிஞர் அண்ணா
- பேரறிஞர்
- தென்னாட்டு பெர்னாட்ஷா
- தென்னாட்டு காந்தி
மு.வரதராசன்
- தமிழ்நாட்டு பெர்னாட்ஷா
பம்மல் சம்பந்த முதலியார்
- நாடகத்தந்தை
சங்கரதாஸ் சுவாமிகள்
- நாகடத் தலமையாசிரியர்
இராச அண்ணாமலைச் செட்டியார்
- தனித்தமிழ் இசைக்காவலர்
வாணிதாசன்
- தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த்
- கவிஞரேறு
தேசிய விநாயகம் பிள்ளை
- கவிமணி
அழ. வள்ளியப்பா
- குழந்தை கவிஞர்
ஜெயகாந்தன்
- தென்னாட்டின் மாப்பசான்
- தற்கால சிறுகதை மன்னன்
வால்ட்டர் ஸ்காட்
- உலகச் சிறுகதையின் தந்தை
டேவிட் விர்த் கிரடித்
- உலக சினிமாவின் தந்தை
தாதே சாகிப் பால்கே
- இந்திய சினிமாவின் தந்தை
கி.ஆ.பெ.விஸ்வநாதன்
- முத்தமிழ்க் காவலர்
இராமலிங்கனார்
- ஆட்சி மொழிக்காவலர்
அண்ணாமலை ரெட்டியார்
- காவடிச் சிந்துக்கு தந்தை
HA கிருட்டிணப்பிள்ளை
- கிருத்துவக் கம்பர்
நாமக்கல் கவிஞர்
- காந்தியக் கவிஞர்
வெங்கடாச்சலம் பிள்ளை
- ஆஸ்தான கவிஞர்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- மகாவித்துவான்
இரா.பி.சேதுபிள்ளை
- சொல்லின் செல்வர் (இலக்கியம்)
ஈ.வெ.கி.சம்பத்
- சொல்லின் செல்வர் (அரசியல்)
ஈ.வெ.ராமசாமி
- பெரியார்
- பகுத்தறிவு பகலவன்
- சுயமரியாதைச் சுடர்
- வெந்தாடி வேந்தர்
- வைக்கம் வீரர்
- ஈரோட்டுச் சிங்கம்
- தெர்காசியாவின் சாக்ரடீஸ்
- பெண்ணினப் போர்முரசு
- புத்தலகத் தொலைநோக்காளர்
இராஜாஜி
- மூதறிஞர்
வ.உ.சிரம்பரனார்
- செக்கிழுத்த செம்மல்
- கப்பலோட்டிய தமிழன்
- தென்னாட்டுத் திலகர்
க.சுப்பிரமணியப் பிள்ளை
- சி.சு. பிள்ளை
- தமிழ் இலக்கிய வரலாற்றை தமிழில் எழுதியவர்
வெங்கடாச்சலம் பிள்ளை
- கரந்தை கவியரசு
எம்.எஸ்.சுப்புலெட்சுமி
- இசைக்குயில்
வேத இரத்தினப் பிள்ளை
- சர்தார்
வி.முனுசாமி
- திருக்குறளார்
செய்குத் தம்பியார்
- சதவதானி
அப்துல் இரகுமான்
- கவிக்கோ
சிங்காரவேலனார்
- மே தினம் கண்டவர்
ம.பொ.சிவஞானம்
- சிலப்புச் செல்வர்
சுந்தரம் பிள்ளை
- பேராசிரியர்
கரந்தைக் கவியரசு
- கரந்தைக் கவியரசு வேங்கடாச்சலம் பிள்ளை
அப்பாத்துரை
- பன்மொழிப்புலவர்
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
- பன்மொழி வித்தகர்
ந.பிச்சமூர்த்தி
- புதுக்கவிதைகளின் தந்தை
வீரமாமுனிவர்
- இஸ்மத் சன்னியாசி (தூய துறவி)
அனுமான்
- சொல்லின் செல்வன்
இளங்குமரனார்
- தமிழ்த்திரு
தமிழழகனார்
- சந்தக்கவிமணி
மேற்கோள்கள்
- ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன் தாய், தாய், தாய் என்று போற்றுகின்றான் – திரு.வி.க.
- “உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தாரே” -இவ்வடி புறநானூறு, மணிமேகலை இரண்டிலும் வருகிறது.மீதூண் விரும்பேல் – ஒளவையார்
- பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம் – சுரதா
- நகையுள்ளும் இன்று இகழ்ச்சி – திருக்குறள்
- நகல்லவர் அல்லர்க்கு பகலும் இருட்டாக இருக்கும் – திருக்குறள்
- வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் – வள்ளலார்.