TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2023 – 15,000 காலிப்பணியிடங்கள் || முக்கியத் தகவல்கள் இதோ !!

TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2023 – 15,000 காலிப்பணியிடங்கள் || முக்கியத் தகவல்கள் இதோ !!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2023 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு பற்றிய முக்கிய விவரங்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கு காண்போம்.

TNPSC குரூப் 4 தேர்வு :

2023 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையின் படி குரூப் 4 தேர்வு அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தீபாவளி நாளுக்கு முன்னதாகவே இந்த அறிவிப்பு வெளியாகும் என அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 4 பதவிகளுக்கு ஒரே நிலை எழுத்து எழுத்து தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், என்பதால் இந்தத் தேர்வுக்கு தேர்வாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலை வருகிறது.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது பத்தாயிரம் காலிப்பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி 2012 ஆம் ஆண்டு அறிக்கையின்படி 10,718 பணியிடங்களும், 2017 ன் படி 9,351 பணியிடங்களும், 2019 ஆம் ஆண்டு 9,398பணியிடங்களும், 2022 ஆம் ஆண்டு 10,117 என கடந்த 12 ஆண்டுகளில் குரூப் 4 தேர்வு மூலம் மட்டுமே 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 5000 இடங்கள் அதிகமாக இருப்பதால் நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

0 Comments