கோயிலில் மணி அடிப்பது ஏன்? எப்போது அடிக்க வேண்டும்? சாஸ்திரங்கள் சொல்வது என்ன?



கோயிலில் மணி அடிப்பதற்காகவே பலரும் செல்வார்கள். குழந்தைகள் மணியை கண்டால் பெற்றோரை தூக்க சொல்லி அடிப்பதையும் பார்த்திருப்போம். அப்படி கோயில் மணியை அடிப்பதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா. அதுவும் கோயில் மணியை எப்போது அடிக்க வேண்டும். எத்தனை முறை அடிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


மணி அடிப்பது ஏன்?


கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக இந்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக கோவிலில் இருக்கும் மணியானது சாதாரண உலோகத்தால் செய்யப்படுவதுதில்லை. இது காட்மியம், ஈயம், தாமிரம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களால் ஆனது.


கோவிலில் இருக்கும் மணியை அடிக்கும் போது அது கூர்மையான மற்றும் நீடித்த ஒலியை ஏற்படுத்துகிறது. சரியாக சொல்லபோனால் இந்த ஒளியானது 7 வினாடிகள் வரை நீடித்த ஒலியை எழுப்புகின்றது. இந்த மணியில் இருந்து வரக்கூடிய ஒலியானது நமது உடலில் காணப்படும் 7 முக்கிய மையங்களில் தாக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாக நமது மூளையானது ஒருநிலைப்படுத்தப்படுகின்றது.  அதுமட்டுமில்லாமல் கோவிலில் மணி அடிக்கும் போது அதிலிருந்து வெளிவரும் ஓசையானது மனதில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை நீங்கி மன அழுத்தம் குறைகின்றது.




எப்போது மணி அடிக்க வேண்டும்?


கோயிலுக்கு உள்ளே செல்லும் போது தான் மணி அடிக்க வேண்டும். ஆனால் பலரும் வெளியே செல்லும் போது அடித்து விட்டு செல்வார்கள். அவ்வாறு செய்யக்கூடாது ஏனென்றால், இவ்வாறு செய்வதன் மூலம் கோவிலின் நேர்மறை ஆற்றலை அங்கேயே விட்டு விடுவதாக சொல்லப்படுகிறது. இதனால் கோயில் உள்ளே வரும் போது அடித்தால் நேர்மறை எண்ணங்கள் உங்களுக்குள்ளேயே இருக்கும்.




பிரசாதம் வழங்கும் போது:


கோயிலில் நீங்கள் பிரசாதம் வழங்குகிறீர்கள் என்றால் கடவுளை வணங்கிவிட்டு 5 முறை மணி அடிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அதனால் நீங்கள் கடவுளுக்கு நெய்வேத்தியம் வழங்கினாலோ, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினாலோ கோயிலில் 5 முறை மணி அடிப்பது கட்டாயமாகும்.