3 வயது சிறுமியின் படுக்கை அறையில் 65 ஆயிரம் தேனீக்கள்..!

3 வயது சிறுமியின் படுக்கை அறையில் 65 ஆயிரம் தேனீக்கள்..!


சிறுமி சமீபகாலமாக தனது படுக்கை அறையில் பேய் போன்ற உருவம் காணப்படுவதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.


அடுத்தடுத்த நாட்களிலும் அந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள அலமாரியில் ஏதோ இருப்பதாக கூறிக்கொண்டே இருந்தார்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள சார்லோட் பகுதியில் பண்ணை வீட்டில் வசித்து வரும் ஆஸ்லே மாசிஸ் கிளாஸ் என்ற பெண்ணுக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி சமீபகாலமாக தனது படுக்கை அறையில் பேய் போன்ற உருவம் காணப்படுவதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.

முதலில் பெற்றோர் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.


திரைப்படங்களை பார்ப்பதால் சிறுமி கற்பனையாக கருதி இருக்கலாம் என நினைத்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களிலும் அந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள அலமாரியில் ஏதோ இருப்பதாக கூறிக்கொண்டே இருந்தார்.

இதனால் சிறுமியின் பெற்றோர் அந்த வீட்டில் வெப் கேமரா பொருத்தி ஆய்வு செய்தனர். அப்போது தான் சிறுமியின் படுக்கை அறையில் ஒரு பெரிய தேன் கூடு இருப்பதை கண்டனர். இதுகுறித்து பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு தெரிவித்தனர். அதன்படி வீட்டிற்கு வந்த தேனீ வளர்ப்பாளர், சிறுமியின் படுக்கை அறையில் இருந்து சுமார் 55 ஆயிரம் முதல் 65 ஆயிரம் தேனீக்கள் கொண்ட 45 கிலோ எடை உடைய தேன் கூட்டை அகற்றி உள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2