தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு!..!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு!..!


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

கட்டண சலுகை

தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும். இந்நிலையில் பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு உடனே துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தேர்வில் தோல்வி அடையும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த துணை தேர்வு எழுத ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது உடனடி தேர்வுக்கு தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தால் சிறப்பு கட்டணம் ரூ.1000 கிடையாது என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அளவு 7 நாட்களில் இருந்து 15 நாட்களாக நீட்டிக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2