தமிழக பத்திரப் பதிவுத் துறைக்கு வந்த புது அப்டேட் – அமைச்சர் சொன்ன தகவல்!


தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் பதிவுத்துறையில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் மூர்த்தி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் பத்திரப்பதிவுத் துறை சிறிது சிறிதாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பதிவுத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வகையில் “ஸ்டார் 3.0” சாப்ட்வேர் தயாரிக்கும் பணிக்கு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த சாப்ட்வேர் குறித்து ஆலோசனை பெற கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர் பத்திராபதிவில் கணினி மயமாக்கலுக்கான ஸ்டார் திட்டம், கடந்த 2000ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது என தெரிவித்தார். தற்போது ஸ்டார் 3.0 சாப்ட்வேரை பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் புதிய வழிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.

அதாவது பத்திரப்பதிவு சேவைகள், பொதுமக்கள் அலுவலகம் சஸ்ஸெல்லாமல் பெற வழி வகை செய்ய வேண்டும். பதிவுத்துறை சேவைகளை மக்கள் பெற செல்போன் போன் செயலி உருவாக்க வேண்டும்.. தரவுகளை எங்கிருந்தும் எளிதாக பயன்படுத்தும் வகையில் “கிளவுட் கம்ப்யூட்டிங்” தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.