TN TRB BEO தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

TN TRB BEO தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கலாம்.

TN TRB BEO தேர்வர்கள் கவனத்திற்கு:

சான்றிதழ்‌ சரிபார்ப்புப்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு அழைப்புப்‌ கடிதம்‌, ஆளறிச்‌ சான்றிதழ்‌ படிவம்‌ மற்றும்‌ சுயவிவரப்படிவம்‌ ஆகியவை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. தங்களது அழைப்புப்‌ கடிதம்‌, ஆளறிச்‌ சான்றிதழ்‌ படிவம்‌ மற்றும்‌ சுயவிவரப்படிவம்‌ ஆகியவற்றை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என சான்றிதழ்‌ சரிபார்ப்புப்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. அழைப்புக்‌ கடிதம்‌ பிற வழிகளில்‌ அனுப்பி வைக்கப்படமாட்டாது என பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட சான்றிதழ்‌ சரிபார்ப்பு சார்ந்த கோரிக்கைகனை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ (trbgrievances@tn.gov.in / Toll Free No. 18004256753) வழியாக தெரிவிக்கலாம்‌. பிற வழி கோரிக்கைகள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ ஏற்றுக்கொள்ளப்படாது எனத்‌ திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. வட்டாரக்‌ கல்வி அலுவலருக்கான பணித்தெரிவிற்கான சான்றிதழ்‌ சரிபார்ப்பு குறித்து அனைத்து விவரங்களும்‌ வெளிப்படையாக இணையதளத்தின்‌ வழியாகவும்‌, செய்திக்‌ குறிப்பின்‌ வாயிலாகவும்‌ தெரிவிக்கப்படும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download TN TRB BEO CV List

Post a Comment

0 Comments