தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கான SMS வந்துருச்சா? உடனே பாருங்க!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கான SMS வந்துருச்சா? உடனே பாருங்க!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற மேல் முறையீடு செய்தவர்களுக்கு புதிதாக அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

உரிமைத்தொகை அப்டேட்

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் 3 கட்டங்களாக முகாம் நடத்தப்பட்டு தகுதி இருப்பவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. சிலருக்கு தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்பதால் 30 நாட்களுக்குள் இ சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் மேல்முறையீட்டு விண்ணப்பங்களுக்கு கடந்த அக்டோபர் மாதத்திற்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டது. இன்னும் சில விண்ணப்பங்கள் கள ஆய்வில் உள்ள நிலையில், அந்த விண்ணப்பங்களில் உள்ள குடும்பத் தலைவிகளின் செல்போன் எண்ணிற்கு அரசு ஊழியர்கள் தொடர்பு கொண்டு அவர்கள் விண்ணப்பங்களில் உள்ள விவரங்களை சரிபார்த்து வருகின்றனர். மேலும் அந்த விண்ணப்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் SMS வந்துள்ளது.

அதில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து விசாரணைக்கு வரும் போது உரிய தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும், நவம்பர் மாத இறுதிக்குள் தங்களது மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கபடும் என SMS வந்துள்ளது. SMS வந்த விண்ணப்பதாரர்களுக்கு அடுத்தபடியாக போன் கால் வரும் எனவும் அதன் பின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய தொகை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2