தமிழகத்தில் நவ. 25 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் !

 தமிழகத்தில் நவ. 25 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் !

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம் வாரியாக வேலைவாய்ப்பு முகநூல் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் 19 ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக 100 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 25ம் ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமானது காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண், பெண் மற்றும் அனைத்து கல்வித்தகுதியுடையோரும் பங்கேற்று வேலை வாய்ப்பை பெறலாம். இந்த முகாமில் கலந்து கொள்ளவிருக்கும் நிறுவனங்கள் 0426-281131 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நவ.23-க்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2