தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை பட்டியல் – தேர்வு தேதி வெளியீடு!!
தமிழகத்தில் எத்தனை நாட்கள் அரையாண்டு விடுமுறை என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
அரையாண்டு விடுமுறை:
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது. அதாவது, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 7ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. மேலும், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி துவங்கி 21ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், அரையாண்டு தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது இருந்தே மாணவர்கள் தேர்வுக்கு தயாராக துவங்கிவிட்டனர்.
இந்நிலையில், அரையாண்டு தேர்வு முடிவடைந்து எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என்பது குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதாவது, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி வரையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களும், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்களும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment