தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும் – பொதுமக்களே உஷார்!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும் – பொதுமக்களே உஷார்!!


தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கனமழை:

குமரிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும், இந்த கனமழை நவம்பர் 25ஆம் தேதி வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குமரிக்கடல் பகுதி, வங்காள வளைகுடா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிவேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்த்துக் கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2