முன்னுரிமை அடிப்படையில் தேர்வுப்பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி - தேர்வுத்துறை இயக்குநரிடம் ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
தேர்வுப்பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கீடு குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உடன் சந்திப்பு
பல ஆண்டுகளாக தேர்வுப்பணி, விடைத்தாள் திருத்தும் பணியை முன்னுரிமையின்றி சார்ந்த சங்கப் பொறுப்பாளர்களுக்கு பெற்றுக் கொடுத்து அதை மட்டுமே மூலதனமாக வைத்து சங்க நடத்தி வருகின்றனர். மேலும் தங்கள சங்கப் பொறுப்பாளர்களுடைய பட்டியலைக் கொடுத்து அருகாமையில் தேர்வுப் பணி வாங்கித் தந்து அவர்களைக் கொண்டு சங்க உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்த்தி வருகின்றனர்.
இதனால் முன்னுரிமை உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தேர்வுப் பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி கிடைக்காமல், மூத்த ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உட்பட்டு வந்தனர்.
தேர்வுப் பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் விதி மீறல்கள் குறித்தும் உரிய முன்னுரிமை கடைபிடிக்காது குறித்தும் உரிய வழிகாட்டுதல் படி இவ்வாண்டு தேர்வுப் பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டி அரசு தேர்வுத்துறை இயக்குனர் மதிப்புமிகு சேதுராமவர்மன் அவர்களைச் சந்தித்து சுமார் அரை மணி விவாதிக்கப்பட்டது.
இவ்வாண்டு முற்றிலும் முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே தேர்வுப்பணி வழங்கப்படும் ( தவிர்ப்பு பெறுவோருக்கு விலக்கு). எவ்வித குறுக்கீடும் இன்று தேர்வுப்பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்கள்.
இளையோராக இருந்து பல ஆண்டுகளாக தேர்வுப் பணி மற்றும் விடைத்தாள் பணி மேற்கொண்டவர்களை வைத்துக் கொண்டால் தான் சரி செய்யமுடியும் என்ற சாக்குச் சொல்லி இளையோருக்கு வழங்கி வந்தனர். ஆனால் இவ்வாண்டு அவர்கள் அனுமதிக்காமல் மூத்தோரே அனுமதிக்கப்படுவர்..வழிமுறை தெரியாவிட்டால் தெரிந்து கொண்டு பணி செய்வார்கள் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அவர்களே கூறியுள்ளார்கள்.
பிற சங்களைப் போல தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும் ஒரு பட்டியலைக் கொடுத்து வேண்டப்பட்டவர்களுக்கு பணி வாங்கிக் கொண்டு சென்றிருக்கலாம். அவ்வாறு பணி வாங்கிக் கொடுத்து சங்க வளர்க்காமல் உழைப்பால் மட்டுமே சங்க வளர்த்து வருகிறது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் எவ்வித தலையீடும் யாருடைய தலையீடும் இன்றி உரிய முன்னுரிமை அடிப்படையில் தேர்வுப்பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர்களின் விருப்பம். அதையே தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அரசுத் தேர்வுத்துறைக்கு எடுத்துச் சென்றுள்ளது. விரைவில் அரசுத் தேர்வுத்துறையில் இருந்து உரிய செயல்முறை வெளியிடப்பட்டு தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக தேர்வுப் பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற 100% வாய்ப்பு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு:
நாம் தொடர்ந்து முயற்சி செய்து அதன் விளைவாக நமது கோரிக்கை ஏற்கப்பட்டு அரசு தேர்வுத்துறை உரிய செயல்முறைகளை வெளியிட வாய்ப்பு உள்ளது. அதன்பின் நாங்கள் கொடுத்த கடிதத்தினால் தான் செயல்முறை வெளியிடப்பட்டுள்ளது என சிலர் செய்திகளை பதிவிடுவார்கள். ஆசிரியர்களின் நலனுக்காக அதையும் நாம் கடந்து செல்வோம்.
கு.தியாகராஜன்
மாநில தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
0 Comments
Post a Comment