தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேருவதில் சிக்கல் – விதிகள் மாற்றம்!!

 தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேருவதில் சிக்கல் – விதிகள் மாற்றம்!!

ஆசிரியர் பணியில் சேருவதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பெறும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் பணி:

தமிழகத்தில் தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்புடன் டி.எல்.எட்., அல்லது பி.எல்.எட்., அல்லது பி.எட்., படிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித்தேர்வின் (TET) முதல் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், மேற்குறிப்பிட்ட தகுதியினை பெற்றிருந்தால் மட்டுமே ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என அதிரடியாக விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியர் பணியில் எளிதில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், பி.எட்., படித்த பட்டதாரிகள் கூட தொடக்க கல்வி டிப்ளமா படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2