ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்த தங்கத்தின் விலை – கிடுகிடு அப்டேட்!

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்த தங்கத்தின் விலை – கிடுகிடு அப்டேட்!

தீபாவளி பண்டிகைக்கு பின்னர் தங்கத்தின் விலை குறையுமென்று எதிர்பார்த்த நிலையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்து உள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை:

ஏழை எளியவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், மேல்தட்டு மக்கள் என்று அனைத்து வகையினரும் வாங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது மக்களை பாதிக்கும் வகையில் உள்ளதால் தங்கத்தின் அன்றாட விலை நிலவரங்கள் அனைத்தும் தினசரி வெளியிடப்பட்டு வருகிறது. விலை ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு தான் மக்கள் நகைகளை வாங்குவதற்கான ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகை சமயத்தில் தங்கத்தின் விலை வழக்கமாக உயறும் தன்மை கொண்டதால், தீபாவளிக்கு பின்னர் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நவம்பர் 14ஆம் தேதியான இன்று 24 கேரட் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூபாய் 200 விலை உயர்ந்து, ரூபாய் 44,920 க்கும், ஒரு கிராம் ரூபாய் 5,615க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 48,680 க்கும், ஒரு கிராம் ரூபாய் 6085 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையானது சில்லறை விற்பனையில் கிராமிற்கு ரூபாய் 60 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 76க்கும், ஒரு கிலோ ரூபாய் 76,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments