கார்த்திகை மாசத்துல 'இந்த' 4 விஷயங்கள நீங்க செய்யவே கூடாதாம்... மீறி செஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?

கார்த்திகை மாசத்துல 'இந்த' 4 விஷயங்கள நீங்க செய்யவே கூடாதாம்... மீறி செஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?

புனிதமான கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரி மலை ஐய்யப்பன் சுவாமிக்கு விரதம் இருந்து, மாலை அணிந்து செல்வார். மிகவும் பிரபலமான கார்த்திகை தீபமும் இந்த மாதத்தில்தான் நடைபெறும் என்பதால், கூடுதல் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

குளிர்ந்த காலநிலையில் வரும் கார்த்திகை மாதம் இறைவனுக்கு மிகவும் உகந்த மாதமாக குறிப்பிடப்படுகிறது. துறவறம் செய்வதற்கு கார்த்திகை மாதம் சிறந்தது என்று வேதங்களில் கூறப்படுகிறது. இந்த ஆண்டு, நவம்பர் 17 ஆம் தேதி(இன்று) தொடங்கிய கார்த்திகை மாதம், டிசம்பர் 16ஆம் தேதி முடிவடைகிறது.

புனித நூல்களின்படி, இந்த மாதம் குளிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. மேலும் நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க உணவுப் பழக்கங்களில் சில மாற்றம் தேவைப்படுகிறது. புனித மாதத்தில் பின்பற்ற வேண்டிய உணவு விதிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

அசைவ உணவை தவிர்க்கவும் 

கார்த்திகை மாதத்தில் அசைவ உணவைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவ அறிவியலின் படி, இந்த மாதத்தில், விலங்குகள் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். இதனால் பல நோய்களை உருவாக்கும் ஆபத்து அதிகம் உள்ளது. எனவே, அவற்றை உட்கொள்வது மனிதர்களிடையே செரிமான பிரச்சினை, வயிற்று கோளாறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 

தினசரி உணவில் பால் சேர்க்கவும் 

பெரும்பலான மக்களின் தினசரி பழக்கமாக பால் குடிப்பது இருக்கிறது. கார்த்திகை மாதத்தில் உடலின் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 50 கிராம் வெல்லத்துடன் தினமும் ஒரு கிளாஸ் பால் குடிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.

வெல்லம் சாப்பிடுங்கள் 

சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருத்தப்படும் வெல்லம், பல்வேறு நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் குளிர்ந்த காலநிலையில் உங்கள் உடலை இயற்கையாகவே சூடாக வைத்திருக்க உதவுகிறது.மேலும், பருவகால இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிக்கிறது.

குளிர்ந்த நீரை தவிர்க்கவும் 

கார்த்திகை மாதம் குளிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த வானிலை மாற்றத்தின் போது குளிரூட்டப்பட்ட அல்லது குளிர்ந்த நீரை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது அடிக்கடி காய்ச்சல், இருமல் மற்றும் சளிக்கு ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

கருப்பு உப்பு பயன்படுத்தவும் 

திடீர் வானிலை மாற்றங்களின் போது, உங்கள் உடல் கடுமையான அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். எனவே வெல்லம், தண்ணீர் மற்றும் கருப்பு உப்பு ஆகியவற்றை இரவில் உட்கொள்வது அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்த உதவும். 

துளசி இலைகளைப் பயன்படுத்தவும் 

பெரும்பலான வீடுகளில் துளிசி செடி வைக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ள துளசி, ஆன்மிக ரீதியாகவும் வணங்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில், மக்கள் புனித துளசி செடியை வணங்கி, அதிலிருந்து சில இலைகளை பறித்து சாப்பிடுகிறார்கள். துளசி இலைகளை சாப்பிடுவது உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. துளசி செடி வீட்டில் தூசி ஒவ்வாமைக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. வானிலையில் ஏற்படும் மாற்றங்களால், தூசி-துகள்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உணவை எளிதில் மாசுபடுத்துகின்றன மற்றும் துளசி இலைகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று நம்பப்படுகிறது. 

பாகற்காய் மற்றும் கத்தரிக்காயை தவிர்க்கவும் 

பாகற்காய் மற்றும் கத்தரிக்காயை கார்த்திகை மாதத்தில் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், இந்த பருவத்தில் பாகற்காய் பழுக்க ஆரம்பிக்கும். சில சமயங்களில், பாகற்காய் அதிகமாக பழுக்குபோது, விதைகளில் பாக்டீரியாவை உருவாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதை சாப்பிடுவது உணவு விஷமாக கருத்தப்படுகிறது மற்றும் பிற உணவு மூலம் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. இதேபோல், கத்திரிக்காய் விதைகள் செரிமான அமைப்பில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். ஆதலால், இந்த இரண்டு காய்கறிகளையும் கார்த்திகை மாதத்தில் சாப்பிடாமல் தவிர்த்து விடுங்கள்.


Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2