TNPSC Group 4: குரூப் 4-க்கு தயாராகுபவரா நீங்க.... இதோ உங்களுக்கான சில உதவிக்குறிப்புகள்..!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த தொகுப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் (tnpsc group 4 syllabus 2023) சில முக்கியமான கேள்வி பதில்களை உங்களுக்கு நாங்கள் இங்கே கூறப்போகிறோம். இந்த கேள்விகளுக்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றை இங்கே காணலாம்...
1. கர்மநாசா நதிநீர் சர்ச்சை எந்த மாநிலங்களுக்கு இடையில் உள்ளது.
(A) பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான்
(B) ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா
(C) பீகார் மற்றும் உத்திரபிரதேசம்
(D) அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர்
(E) விடை தெரியவில்லை
விடை: (C)
2. அச்சுதநாயர் காலத்தில் விஜயநகர பேரரசு எத்தனை ராஜ்ஜியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
(A) 15 ராஜ்ஜியங்கள்
(B) 16 ராஜ்ஜியங்கள்
(C) 17 ராஜ்ஜியங்கள்
(D) 18 ராஜ்ஜியங்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (C)
3. பானிபட் போரில் பாபரின் இராணுவத்தில் இருந்த தலைசிறந்த துப்பாக்கி வீரர் (A) உஸ்தாத் அலி
(B) ஜாஃபர்கான்
(C) ஹூமாயூன்
(D) ஹிண்டால்
(E) விடை தெரியவில்லை
விடை: (A)
4. சிவந்த மண் கற்களால் கட்டப்பட்ட 'லால் கிலா' எனப்படும் கோட்டையைக் கட்டியவர்?
(A) ஜஹாங்கீர்
(B) ஷாஜஹான்
(C) அக்பர்
(D) அவுரங்கசீப்
(E) விடை தெரியவில்லை
விடை: (B)
5. விஜய நகரம் எந்த பெயரில் அழைக்கப்பட்டது?
1. பீஜநகர்
2. விருபாட்ஷபுரம்
3. ஹோஸ்பட்டணம்
4. வித்யாநகரம்
(A) 1 மட்டும்
(B) 2 மட்டும்
(C) 2, 3 மட்டும்
(D) 1, 2, 3, 4
(E) விடை தெரியவில்லை
விடை: (D)
6. கீழ்வருபவற்றுள் அரசரின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை முன்வைத்த முதல் அரசர் யார்?
(A) அலாவுதீன் கில்ஜி
(B) பால்பன்
(C) இல்ட்டுமிஷ்
(D) இரஷியா
(E) விடை தெரியவில்லை
விடை: (B)
7. ஹரப்பன் மக்களால் பயிரிடப்படாத பயிர் எது?
(A) பார்லி
(B) கோதுமை
(C) பஞ்சு
(D) கரும்பு
(E) விடை தெரியவில்லை
விடை: (D)
8. சபாநாயகரால் பாராளுமன்ற அமர்வினை முடிவுக்கு கொண்டு வருதல் ___ ஆகும்.
(A) கலைப்பு
(B) ஒத்திவைப்பு
(C) முடிவுக்கு கொண்டு வருதல்
(D) அழைப்பு
(E) விடை தெரியவில்லை
விடை: (C)
9. தடுப்புக்காவலர் சட்டத்தின்படி மூன்று மாத காலத்திற்கு பிறகு செயல்படுத்த அனுமதிப்பவர் யார்?
(A) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
(B) இந்திய தலைமை வழக்குரைஞர்
(C) தலைமை வழக்கறிஞர்
(D) ஆலோசனைக்குழு
(E) விடை தெரியவில்லை
விடை: (D)
10. கீழ்காணப்படும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளில், உச்சநீதிமன்றத்தை குறிப்பவை யாவை?
(A) விதி 36 முதல் 51 வரை
(B) விதி 79 முதல் 123 வரை
(C) விதி 124 முதல் 147 வரை
(D) விதி 12 முதல் 35 வரை
(E) விடை தெரியவில்லை
விடை: (C)