சமையல் அறையை புதுப்பித்த தம்பதிக்கு கிடைத்த புதையல்..!

சமையல் அறையை புதுப்பித்த தம்பதிக்கு கிடைத்த புதையல்..!


வீட்டின் சமையல் அறையின் தரைப்பகுதியை மண்வெட்டியால் கொத்தி கொண்டிருந்த போது அவர்களது கண்களில் ஒரு பானை தென்பட்டது.

புதையல் கிடைத்த மகிழ்ச்சியை தம்பதியினர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.


இங்கிலாந்தில் உள்ள தெற்கு போர்டான் பகுதியை சேர்ந்த பெக்கி- ராபர்ட் தம்பதி பழைய வீடு ஒன்றை வாங்கினர். அதை புதுப்பிக்கும் வேலைகளை தம்பதி செய்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் சமையல் அறையின் தரைப்பகுதியை மண்வெட்டியால் கொத்தி கொண்டிருந்த போது அவர்களது கண்களில் ஒரு பானை தென்பட்டது. அதில் மேல் பகுதி முழுவதும் மண் நிரப்பப்பட்டிருந்த நிலையில், அவற்றை விலக்கி பார்த்தபோது பானை முழுவதும் தங்க காசுகளும், வெள்ளி காசுகளும் இருந்தன.


ராபர்ட் அவற்றை எண்ணினார். மொத்தம் 1,029 நாணயங்கள் இருந்தன. அவை 1642-ம் ஆண்டுக்கும், 1644-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த முதலாம் ஜேம்ஸ் மற்றும் முதலாம் சார்லஸ் மன்னர்களின் உருவம் பதித்த நாணயங்கள் ஆகும். புதையல் கிடைத்த மகிழ்ச்சியை அந்த தம்பதியினர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.


பின்னர் அவை அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஏலம் விடப்பட்டது. அதன் மூலம் தம்பதிகளுக்கு 60 ஆயிரம் பவுன்ட் பணமும் கிடைத்தது. அந்த பணத்தை தனது மகனின் படிப்புக்கும், வீட்டை புதுப்பிக்கவும் பயன்படுத்த உள்ளதாக தம்பதியினர் தெரிவித்தனர்.


Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2