ஜூன் 4ல் மக்களவை தேர்தல் முடிவுகள் – அதிகாரிகளுக்கான தேர்வு தொடக்கம்!!

ஜூன் 4ல் மக்களவை தேர்தல் முடிவுகள் – அதிகாரிகளுக்கான தேர்வு தொடக்கம்!!இந்தியாவில் மக்களவைத் தேர்தல் தற்போது 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இன்னும் இறுதி கட்டம் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், அதனை ஜூன் 1ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். இவை அனைத்திற்குமான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது.


இந்நிலையில் இந்த வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் அலுவலர்களை தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எட்டப்படும். அதில் தகுதியானவர்கள் 2 நாட்களுக்குள் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தேர்வானவர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.


மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு என்னும் பணிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோரும் அடங்குவர்.

Post a Comment

0 Comments