தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!


தமிழகத்தில் முழுவதும் இன்று மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக வெப்ப அலை ஓய்ந்து மழைப் பொழிந்து வருகிறது. இதனால், மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


இந்நிலையில் பரவலாக மிதமான அளவில் பெய்த மழை தற்போது வலுப்பெற்று கனமழையாக கொட்டுகிறது. அந்த வகையில் இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு  அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று இரவுக்குள் அங்கு மழை பெய்து விடும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.


அதனைத் தொடர்ந்து நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக வந்த அறிவிப்பின் படி மே 20 வரை (இன்று) தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டதால், இன்று அநேக இடங்களில் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.

Post a Comment

0 Comments