பிரதமரின் கல்வி உதவித்தொகை – விண்ணப்பிக்க டிச.31 கடைசி தேதி!

பிரதமரின் கல்வி உதவித்தொகை – விண்ணப்பிக்க டிச.31 கடைசி தேதி!

g

இந்தியாவில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை:

பிரதமரின் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவை சேர்ந்தவர்கள் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். தமிழகத்திலிருந்து 3093 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் இருக்கும் மாணவர்கள் இந்த உதவி தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 8 மற்றும் 10 வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுடைய மாணவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் திட்டம் தொடர்பான விவரங்களுக்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

Post a Comment

0 Comments