WHATSAPP உடன் உங்கள் மெயில் முகவரி இணைக்கலாம் – சூப்பர் அப்டேட்!

WHATSAPP உடன் உங்கள் மெயில் முகவரி இணைக்கலாம் – சூப்பர் அப்டேட்!

WhatsApp தனது iOS பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக பயனர்கள் தங்களது இக்கட்டான நேரத்திலும் செய்திகளை அணுக முடியும்.

வாட்ஸ் அப்:

உலக அளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தி வரும் செய்தி பரிமாற்ற செயலியாக WHATSAPP செயல்பட்டு வருகிறது. மெட்டாவுக்கு சொந்தமான WhatsApp நிறுவனம் தனது பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அடிக்கடி புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது அந்த வகையில் ஐஓஎஸ் பயனர்கள் தங்களது WhatsApp கணக்குடன் மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொள்வதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நமது மெயில் தொடர்பான விவரங்கள் மற்றவர்களுக்கு தெரியாது என்றும், நெட்வொர்க் சிக்கல்கள் அல்லது பிற தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக வாட்ஸ் அப்பில் எஸ்எம்எஸ் களை பெற முடியாத பட்சத்தில் மின்னஞ்சல் முகவரி மூலம் பின் உள்ளிட்டு எஸ் எம் எஸ் களை நாம் அறிந்து கொள்ள முடியும்.

இந்த அம்சமானது ஐபோனின் ஆப் ஸ்டோரில் உள்ள புதிய பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது. மின்னஞ்சல் முகவரியை சேர்ப்பதற்கு அக்கவுண்ட் என்ற ஆப்ஷனில் சென்று ADD MAIL என்பதை கிளிக் செய்ய வேண்டும். இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சோதனை கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் WhatsApp உடன் மின்னஞ்சலை இணைப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments