இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி..!!

இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி..!


இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்து தேர்வுக்கு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.


இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 3,359(ஆண்கள்-2,576, பெண்கள்-783) பணிக்காலியிடங்கள் கொண்ட இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும், டிசம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது.


அதனடிப்படையில், இத்தேர்விற்கான மாதிரித் தேர்வு, இன்று(7ம் தேதி) துவங்கி 31ம் தேதி வரை பாடவாரியாவும், முழு மாதிரித் தேர்வாகவும், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.


இன்று பகல் 2 மணி முதல் 3.20 மணி வரை உளவியல், உளவியல் சார்ந்த அனைத்து பாடங்களும், வரும் 10ம் தேதி பகல் 2 மணி முதல் 3.20 வரை பொது அறிவியல், இயற்பியல், வேதியியல், 3.30 மதல் 4.50 வரை, தமிழ் மொழி தகுதித் தேர்வு நடக்கிறது. வரும் 14ம் தேதி பொது அறிவியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு மற்றும் ஊட்டச்சத்தியல், 17ம் தேதி சமூக அறிவியல், வரலாறு, புவியியல், தமிழ் மொழி தகுதித் தேர்வும், 21ம் தேதி சமூக அறிவியல், இந்திய அரசியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.


அதேபோல், வரும் 24ம் தேதி பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள், தமிழ் மொழி தகுதித் தேர்வு, 27 ம் தேதி மாதிரித் தேர்வு- 1, தமிழ் மொழி தகுதித் தேர்வு, மாதிரித் தேர்வு -1 முதன்மை எழுத்துத் தேர்வு நடக்கிறது. வரும் 30ம் தேதி மாதிரித் தேர்வு-2, தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வும் நடக்கிறது. விருப்பம் உள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை 04286 -222260 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற இனையதளம் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரிலோ தொடர்பு கொண்டு, தங்களது பெயர், முகவரி, மொபைல் எண் அடங்கிய சுயவிபரத்தை பதிவு செய்து, பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.




Post a Comment

0 Comments