பாரதியார் பல்கலை.யில் பிஎச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!!!
பிஎச்.டி., படிப்புக்கு வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கோவை பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்துள் ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பிஎச்.டி., (பகுதி நேரம், முழு நேரம்) ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கை https://b-u.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக நாளை (நவ.1) முதல் வரும் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
விண்ணப்ப கட்டணமாக ஆயிரம் ரூபாயை இணையவழியாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ.500-ஐ சாதி சான்றிதழுடன் இணையவழியாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ‘பதிவாளர், பாரதியார் பல்கலைக்கழகம்-கோவை-641046’ என்ற முகவரிக்கு வரும் 15-ம் தேதி மாலை 5 மணி வரை அனுப்பலாம். கடைசி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்களும், உரிய கட்டணமின்றி பெறப்படும் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப் படாது.
டிசம்பர் 2023 பிஎச்.டி (பகுதி நேரம், முழு நேரம்) ஆராய்ச்சி படிப்புக்கான சேர்க்கையானது, ஜூன் 2023 பொது நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண், நேர்காணல் அடிப்படையிலும், பாரதியார் பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளின் அடிப்படையிலும் நடைபெறும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ள லாம். இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.
0 Comments
Post a Comment