TNPSC பொது தமிழ் – பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

TNPSC பொது தமிழ் – பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.


அ – வரிசை

 • அணியர் – நெருங்கி இருப்பவர்
 •  அணையார் – போன்றார்
 •  அளைஇ – கலந்து
 • அகன் – அகம், உள்ளம்
 • அமர் – விருப்பம்
 • அமர்ந்து – விரும்பி
 • அகத்தான் ஆம் – உள்ளம் கலந்து
 • அணி – அழகுக்காக அணியும் நகைகள்
 •  அல்லவை – பாவம்
 •  அற்று – அது போன்று
 • அல்லைத்தான் – அதுவும் அல்லாமல்
 • அன்ன – அவை போல்வன
 • அகம் – உள்ளம்
 • அமையும் – உண்டாகும்
 • அறிகை – அறிதல் வேண்டும்
 • அல்லல் – துன்பம்
 • அளகு – கோழி
 • அரவு – பாம்பு
 •  அரவம் – பாம்பு
 •  அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி
 • அமுத கிரணம் – குளிர்ச்சியான ஒளி
 • அலகு இல் – அளவில்லாத
 • அலகிலா – அளவற்ற
 •  அன்னவர் – அத்தகைய இறைவர்
 •  அகழ்வாரை – தோண்டுபவரை
 • அடவி – காடு
 • அரம்பையர் – தேவ மகளிர்
 • அளவின்று – அளவினையுடையது
 • அவி உணவு – தேவர்களுக்கு வேள்வியின் பொழுது கொடுக்கப்படும்  உணவு
 • அற்றே – போன்றதே
 • அனைத்தாலும் – கேட்ட அத்துணை அளவிலும்
 • அவியினும் – இறந்தாலும்
 • அரு – உருவமற்றது
 • அலகில – அளவற்ற
 • அகன்று – விலகி
 •  அயலார் – உறவல்லாதோர்
 •  அழுக்காறு – பொறாமை
 •  அருவிணை – செய்தற்கரிய செயல்
 •  அடர்த்து எழு குருதி – வெட்டுப்பட்ட  இடத்தினின்றும் பீறிட்டு ஒழுகும் செந்நீர்
 •  அம்பி – படகு
 •  அல் – இருள்
 •  அடிமை செய்குவென் – பணி செய்வேன்
 •  அமலன் – குற்றமற்றவன்
 •  அரி – நெற்கதிர்
 •  அம் – அழகிய
 •  அரா – பாம்பு
 • அல்லல் – துன்பம்
 • அங்கை – உள்ளங்கை
 •  அங்கணர் – அழகிய நெற்றிக்கண்ணையுடைய சிவன்
 • அரியாசணம் – சிங்காசணம்
 • அறைகுவன் – சொல்லுவான்
 •  அணித்தாய் – அண்மையில்
 • அடவி – காடு
 •  அலறும் – முழங்கும்
 • அணிந்து – அருகில்
 •  அறைந்த – சொன்ன
 • அதிசயம் – வியப்பு


ஆ – வரிசை

 •  ஆர்வம் – விருப்பம்
 •  ஆற்றவும் – நிறைவாக
 • ஆற்றுணா – ஆறு – உணா
 • ஆறு – வழி
 •  ஆடவர் – ஆண்கள்
 •  ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
 •  ஆடுபரி – ஆடுகின்ற குதிரை
 •  ஆழி – மோதிரம்
 •  ஆனந்தம் – மகிழ்ச்சி
 • ஆறு – நல்வழி
 •  ஆழி – கடல்
 •  ஆழி – உப்பங்கழி
 •  ஆன்ற – உயர்ந்த
 • ஆன்றோர் – கல்வி, கேள்வி, பண்பு ஆகியவற்றில் சிறந்தோர்
 •  ஆர் அவை – புலவர்கள் நிறைந்த அவை
 • ஆக்கம் – செல்வம்
 •  ஆயகாலை – அந்த நேரத்தில்


இ – வரிசை

 •  இன்சொல் – இனிய சொல்
 • இன்சொலன் – இனிய சொற்களைப் பேசுபவன்
 • இன்சொலினதே – இனிய சொற்களைப் பேசுதலே
 •  இன்புறாஉம் – இன்பம் தரும்
 • இன்மை – இப்பிறவி
 •  இரட்சித்தாணா – காப்பாற்றினானா
 •  இணக்கவரும்படி – அவர்கள் மனம் கனியும் படி
 •  இல்லார் – செல்வம் இல்லாதவர்
 •  இடித்தல் – கடிந்துரைத்தல்
 •  இடுக்கண் – துன்பம்
 •  இசைந்த – பொருத்தமான
 •  இருநிலம் – பெரிய உலகம்
 •  இகழ்வார் – இழிவுபடுத்துவோர்
 •  இறப்பினை – பிறர் செய்த துன்பத்தை
 •  இறைந்தார் – நெறியைக் கடந்தவர்
 •  இன்னா – தீய
 •  இன்னாசொல் – இனிமையற்ற சொல்
 •  இழைத்துணர்ந்து – நுட்பமாக ஆராய்ந்து
 •  இடர் – இன்னல்
 •  இன்னா – தீங்கு
 •  இனிய – நன்மை
 •  இன்மை – வறுமை
 •  இளிவன்று – இழிவானதன்று
 •  இருநிலம் – பெரிய நிலம்
 •  இசைபட – புகழுடன்
 •  இரந்து செப்பினான் – பணிந்து வேண்டினான்
 •  இன்னல் – துன்பம்
 •  இறைஞ்சி – பணிந்து
 •  இழக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
 •  இடும்பை – துன்பம்
 •  இகல் – பகை
 •  இறுவரை – முடிவுக்காலம்
 •  இயைந்தக்கால் – கிடைந்தபொழுது
 •  இமையவர் – தேவர்
 •  இறையோன் – தலைவன்
 •  இனிதின் – இனிமையானது
 •  இன்னல் – துன்பம்
 • இருத்தி – இருப்பாயாக
 •  இந்து – நிலவு
 •  இடர் – துன்பம்
 •  இழக்கும் – கடிந்துரைக்கும்
 •  இடிப்பார் – கடிந்து அறிவுரை கூறும் பெரியார்
 •  இருள் – பகை
 •  இரண்டும் – அறனும் இன்பமும்
 •  இடர் – துன்பம்
 •  இரும்பணை – பெரிய பனை
 •  இவண் நெறியில் – இவ்வழியில்
 •  இனை – சுற்றம்
 •  இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்


ஈ – வரிசை

 •  ஈனும் – தரும்
 •  ஈன்றல் – தருதல் உண்டாக்குதல்
 •  ஈயும் – அளிக்கும்
 •  ஈரிருவர் – நால்வர்
 •  ஈதல் – கொடுத்தல்
 •  ஈயப்படும் – அளிக்கப்படும்
 •  ஈர்த்து – அறுத்து
 •  ஈண்டிய – ஆய்ந்தளித்த


உ – வரிசை

 •  உன்னி – நினைத்து
 •  உரும் – இடி
 •  உறுவை – புலி
 •  உல்குபொருள் – வரியாக வரும் பொருள்
 •  உறுபொருள் – அரசு உரிமையாளர் வரும்பொருள்
 •  உறா அமை – துன்பம் வராமல்
 •  உதிரம் – குருதி
 •  உன்னேல் – நினைக்காதே
 •  உண்டனென் – உண்டோம் என்பதற்கு சமமானது
 •  உபகாரத்தான் – பயன் கருதாது உதவுபவன்
 •  உள்வேர்ப்பர் – மனத்தினுள் மறைத்து வைத்திருப்பார்
 •  உலகம் – உயர்ந்தோர்
 •  உரவோர் – மன வலிமையுடையோர்
 •  உம்பரார் பதி – இந்திரன்
 •  உய்ய – பிழைக்க
 •  உறுதி – உள வலிமை
 •  உடு – சொரிந்த
 •  உணர்வு – அறிவியல் சிந்தனை
 •  உரு – வடிவம்
 •  உலையா உடம்பு – தளராத உடல்
 •  உயம்மின் – போற்றுங்கள்
 •  உறைதல் – தங்குகள்
 •  உய்ம்மின் – பிழைத்துக் கொள்ளுங்கள்
 •  உயர்ந்தன்று – உயர்ந்தது
 •  உபாயம் – வழிவகை
 •  உடையார் – செல்வம் உடையார்
 •  உவப்ப – மகிழ
 •  உருகுவார் – வருந்துவார்
 •  உண்பொழுது – உண்ணும் பொழுது
 •  உணா – உணவு
 •  உணர்வு – நல்லெண்ணம்
 • உடுக்கை – ஆடை
 •  உழுபடை – விவசாயம் செய்யும் கருவிகள்


ஊ – வரிசை

 •  ஊன்றும் – தாங்கும்
 •  ஊற்று – ஊன்று கோல்


எ – வரிசை

 • என்பு – எலும்பு
 • எவன் கொலோ – என்ன காரணமோ
 •  எய்யாமை – வருந்தாமை
 •  எண் – எண்கள் கணிதம்
 •  எழத்து – இலக்கண இலக்கியங்கள் வடிவங்கள்
 •  எம்பி – என் தம்பி
 •  எய்தற்கு – கிடைத்தற்கு
 •  எளிமை – வறுமை
 •  எள்ளுவர் – இகழ்வர்
 •  எண்டு – கரடி
 •  எழில் – அழகு
 •  என்பால் – என்னிடம்
 •  எஃகு – உறுதியான
 • எயினர் – வேடர்
 •  எள்ளறு – இகழ்ச்சி இல்லாத
 •  எய்தற்கு – கிடைத்தற்கு
 •  என்பணிந்த – எலும்பை மாலையாக அணிந்த


ஏ – வரிசை

 •  ஏமாப்பு – பாதுகாப்பு
 •  ஏமரா – பாதுகாவல் இல்லாத
 •  ஏர் – அழகு
 •  ஏசா – பழியில்லா
 •  ஏதம் – குற்றம்
 •  ஏய்துவர் – அடைவர்
 •  ஏத்தும் – வணங்கும்
 •  ஏமாப்பு – பாதுகாப்பு
 •  ஏக்கற்று – கவலைப்பட்டு


ஒ – வரிசை

 •  ஒண்பொருள் – சிறந்த பொருள்
 •  ஒழுகுதல் – ஏற்று நடத்தல்
 •  ஒல்கார் – விலகமாட்டார்
 •  ஒல்லாவே – இயலாவே
 •  ஒட்ட – பொருந்த
 •  ஒழுகுதல் – நடத்தல், வாழ்தல்
 •  ஒடுக்கம் – அடங்கியிருப்பது
 •  ஒள்ளியவர் – அறிவுடையவர்
 •  ஒம்பப்படும் – காத்தல் வேண்டும்
 •  ஒப்புரவு – உதவுதல்
 • ஒற்சம் – தளர்ச்சி
 • ஒப்பர் – நிகராவர்
 •  ஒண்தாரை – ஒளிமிக்க மலர்மாலை
 •  ஒன்றோ – தொடரும் சொல்

ஓ – வரிசை

 • ஓதின் – எதுவென்று சொல்லும் போது

 

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2