கால்முளைத்த கதைகள்” என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

8th Tamil Unit 1 - Kaditham

இயல்-1 கடிதம் எழுதுதல்

உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின், “கால்முளைத்த கதைகள்” என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

12, தமிழ் வீதி,

மதுளர-2

28,டசெப்டம்பர் 2022


ஆருயிர் நண்பா !

வணக்கம் . நலம். நலமறிய ஆவல் என்னுளடய பிறந்தநாள் பரிசாக நீ அனுப்பிய எழுத்தாளர் எஸ் இராமகிருஷ்ணன் எழுதிய கால் முளளத்த கதைகள் என்ற களதப்புத்தகம் கிளடத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதில் உள்ள கதைகள் அனைத்தையும் படித்தேன். படிப்பதற்குப் புதுமையாகவும், மிக்க ஆர்வமாகவும் இருந்தது.

உலகம் தோன்றியது எப்படி என்ற வினாவிற்கு, இன்றுவறை  தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை .

உலகம் எப்படி தோன்றியது என்ற கேள்விக்கு இந்நூலிலுள்ள கதைகள், வியப்பான விடைகளைத் தருகின்றது  பழங்குடியினர் முப்பது கதைகளை கொண்டதாக இத்தொகுப்பு உருவக்கப்பட்டுள்ளது.

வண்ணத்துப்பூச்சி ஏன் பூக்களைச் சுற்றுகிறது என்ற ஒரு கதை. வயதான பெண்  ஒருத்தி தன்னுடையபூந்தோட்டத்தில் பூத்திருந்த பூக்களை  பறித்துவிட்டதை எண்ணி, இரவு முழுவதும் வருந்தினாள்

மறுநாள் மறைந்து இருந்து பூக்களைப் பறித்தவர்களைப் பிடித்துவிட்டாள்.

பூக்கள்மீது இருந்த ஆசையால் பறித்ததாம் என்று ஓர் ஆணும் ஒருபெண்ணும் கூறுகின்றனர். கிழவி அவ்விருவறையும் வண்ணத்துப் பூச்சிகளாக உருமாறச் செய்துவிடுகிறாள். அன்றிலிருந்து வண்ணத்துபூச்சிகள் பூக்களைச் சுற்றிக் சகொண்டிருக்கின்றன  என்று, கதை முடிகிறது.

இது எனக்கு  மிகவும் பிடித்திருக்கிறது.


அன்பு நண்பன்,

அ.எழிலன்.


உறைமேல் முகவரி:

கி.தமிழின்பன்,

2,வள்ளுவன் சதரு,

காஞ்சி-1