இலக்கணக் குறிப்பு அறிக
9th Tamil - இயல்-1 முதல் இயல்-9 வரை - இலக்கண குறிப்பறிதல் அனைத்தும்
இயல் - 1
- 1. எத்தனை எத்தனை , விட்டு விட்டு - அடுக்குத் தொடர்கள்
- 2 . ஏந்தி - வினையெச்சம்
- 3 . காலமும் - முற்றும்மை
- 4. முத்திக்கனி - உருவகம்
- 5 . தெள்ளமுது - பண்புத்தொகை
- 6 . குற்றமிலா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
- 7 . நா - ஓரெழுத்து ஒருமொழி
- 8 . செவிகள் உணவான - நான்காம் வேற்றுமைத்தொகை
- 9 . சிந்தாமணி - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
இயல் - 2
- 10 . வெந்து , வெம்பி , எய்தி - வினையெச்சங்கள்
- 11 . மூடுபனி - வினைத்தொகை
- 12 . ஆடுங் கிளை - பெயரெச்சத் தொடர்
- 13 . கருங்குவளை , செந்நெல் - பண்புத்தொகைகள்
- 14 . விரிமலர் - வினைத்தொகை
- 15 . தடவரை - உரிச்சொல் தொடர்
- 16 . மூதூர் , நல்லிசை , புன்புலம் - பண்பு தொகைகள்
- 17 . நிறுத்தல் - தொழிற்பெயர்
- 18 . அமையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- 19 . நீரும் நிலமும் , உடம்பும் உயிரும் - என்னும் மைகள்
- 20 . அடுபோர் - வினைத்தொகை
- 21 . கொடுத்தார் - வினையாலணையும் பெயர்
இயல் - 3
- 22 . தோரண வீதியும் , தோமறுகொட்டியும் - எண்ணும்மைகள்
- 23 . காய்க்குலைக் கமுகு , பூக்கொடி வல்லி , முத்துத் தாமம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகைகள்
- 24 . மாற்று மின் , பரப்பும் மின் - ஏவல் வினைமுற்றுகள்
- 25 . உறுபொருள் - உரிச்சொல்தொடர்
- 26 . தாழ் பூந்துறை - வினைத்தொகை
- 27 . பாங்கறிந்து - இரண்டாம் வேற்றுமைத் தொகை
- 28 . நன் பொருள் , தண் மணல் , நல்லுரை - பண்புதொகைகள்
9 th இலக்கணக்குறிப்புகள்
இயல்- 4
- 29 . பண்பும் அன்பும் , இனமும் மொழியும் - எண்ணும்மைகள்
- 30 . சொன்னோர் - வினையாலணையும் பெயர்
- 31. உணர்ந்தோர் - வினையாலணையும் பெயர்
இயல் - 5
- 32. மாக்கடல் - உரிச்சொல் தொடர்
- 33. ஆக்கல் - தொழில் பெயர்
- 34. பொன்னே போல் - உவம உருபு
- 35. மலர்க்கை - உவமைத்தொகை
- 36. வில் வாள் - உம்மைத்தொகை
- 37. தவிர்க்க ஒணா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
- 38. அறிவார், வல்லார் - வினையாலணையும் பெயர்கள்
- 39. விதையாமை , உரையாமை - எதிர்மறை தொழிற்பெயர்
- 40. தாவா - ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சங்கள்
இயல்- 6
- 41. பைங்கிளி - பண்புத்தொகை
- 42. பூவையும் குயில்களும், முதிரையும் , சாமையும் , வரகும் - எண்ணும்மைகள்
- 43. இன்னிளங் குருளை -பண்புத்தொகை
- 44. அதிர் குரல் - வினைத்தொகை
- 45. மன்னிய - பெயரெச்சம்
- 46. வெரீஇ - சொல்லிசை அளபெடை
- 47. கடிகமழ் - உரிச்சொற்றொடர்
- 48. மலர்க்கண்ணி - மூன்றாம் வேற்றுமை உருபு என்னும் உடன்தொக்கதொகை
- 49. எருத்துக்கோடு - ஆறாம் வேற்றுமைத்தொகை
- 50. கரைபொரு - இரண்டாம் வேற்றுமைத்தொகை
- 51. மறைமுகம் - உவமைத்தொகை
- 52. கருமுகில்- பண்புத்தொகை
- 53. வருமலை - வினைத்தொகை
- 54. முத்துடைத் தாமம் - இரண்டாம் வேற்றுமை தொகை
- 55. நற்றவம் - பண்புத்தொகை கள்
- 56. செய் கோலம் - வினைத்தொகை
- 57. தேமாங்கனி ( தேன் போன்ற மாங்கனி) - உவமைத்தொகை
- 58. இறைஞ்சி - வினையெச்சம்
- 59. கொடியனார் - இடைக்குறை
- ----------------------------------------------------------------------
- 60 .பிறவி இருள் , ஒளியமுது , வாழ்க்கைப் போர் - உருவகங்கள்
- 61 . பாண்டம் பண்டமாக - அடுக்குத்தொடர்
- 62 .வாயிலும் சன்னலும் - எண்ணும்மை
- 63 . ஆக்குக , போக்குக , நோக்குக - வியங்கோள் வினைமுற்றுக்கள்
- -----------------------------------------------------------------------------------------------------------
இயல் - 9
- 64 .உருண்டது , போனது - ஒன்றன் பால் வினைமுற்றுகள்
- 65 .சரிந்து - வினையெச்சம்
- 66 .அனைவரும் - முற்றும்மை
- 67 .களைஇய - சொவ்விசை அளபெடை
- 68 .பெருங்கை , மென்சினை - பண்புத்தொகைகள்
- 69 .பொளிக்கும் - செய்யும் என்னும் வினைமுற்று
- 70 .பிடிபசி - ஆறாம் வேற்றுமைத் தொகை
- 71 .அன்பின - பலவின்பால் அஃறிணை வினைமுற்று
Dear visitors we understand your expectations for tamilnadu state board samacheer book 12th Tamil Full Guide solutions book back answers guide.these 12th Tamil book answers guide help for your exam preparation for online study you can get good marks in your Examination.
0 Comments
Post a Comment