தமிழ்ச்சொல் வளம் - 10th Tamil - Tamil Sol Valam

நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார் மகாகவி பாரதியார்.

காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னைநிலைநிறுத்திக் கொண் டுள்ளது தமிழ். என்ன வளம் இல்லை என்று  எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொ ழி. அனைத்து வளமும் உண்டெ ன்றுவிடை பகர்கிறது, தமிழ்ச்சொல் வளம்.

அடி வகை

ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள். 

தாள் : நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி

தண்டு : கீரை,வாழை முதலியவற்றின் அடி

கோல் : நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி.

தூறு : குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி

தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி

கழி : கரும்பின் அடி

கழை : மூங்கிலின் அடி 

அடி : புளி, வேம்பு முதலியவற்றின் அடி

காய்ந்த அடியும் கிளையும் பெயர்பெறுதல்

காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள்.

சுள்ளி: காய்ந்த குச்சு (குச்சி); 

விறகு: காய்ந்த சிறுகிளை; வெங்கழி: காய்ந்த கழி;

கட்டை: காய்ந்த கொம்பும் கவையும் அடியும்.

இலை வகை

தாவரங்களின் இலை வகை களைக் குறிக்கும் சொற்கள்.

இலை: புளி, வேம்பு முதலியவற்றின் இலை; 

தாள்: நெல்,புல் முதலியவற்றின்இலை ; தோகை : சோளம், க ரு ம் பு முதலியவற்றின் இலை; 

ஓலை: தென்னை, பனை முதலியவற்றின் இலை; 

சண்டு: காய்ந்ததாளும் தோகையும்;

 சருகு: காய்ந்த இலை.

கொழுந்து வகை.

தாவரத்தின் நுனிப்பகுதிகளைக்குறிக்கும் சொற்கள்.

துளிர் அல்ல து தளிர்: நெ ல், பு ல் முதலியவற்றின் கொழுந்து; 

முறி அல்லது கொழுந்து: புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து; 

குருத்து: சோளம், கரும்பு,தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து;

கொழுந்தாடை : கரும்பின் நுனிப்பகுதி.

பூவின் நிலைகள்

பூவின் நி லை க ளைக் கு றி க் கு ம்சொற்கள்.

அரும்பு: பூவின் தோற்றநிலை; 

போது: பூ விரியத் தொடங்கும் நிலை; 

மலர்(அலர்): பூவின் மலர்ந்த நிலை; 

வீ: மரஞ்செடியினின்று பூ கீழேவிழுந்த நிலை; 

செம்மல்: பூ வாடிய நிலை.

பிஞ்சு வகை

தாவர த்தின் பிஞ்சு வகை க ளுக்கு 

வழங்கும் சொற்கள்.

பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு; 

பிஞ்சு: இளம் காய்; வடு: மாம்பிஞ்சு; மூசு:

பலாப்பிஞ்சு; கவ்வை: எள்பிஞ்சு; குரும்பை:

தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு; 

முட்டுக் குரும்பை: சிறு குரும்பை; இளநீர்:

முற்றாத தேங்கா ய்; நுழாய்: இளம்பாக்கு; 

கருக்கல்: இளநெல்; கச்சல்: வாழைப்பிஞ்சு.

குலை வகை

தாவரங்களின் குலை வகைகளைக்

குறிப ்ப த ற ்கா ன (கா ய ்களையோ

கனிகளையோ) சொற்கள்: 

கொத்து: அவரை, துவரை முதலியவற்றின்

குலை; குலை: கொடி முந்திரி போன்றவற்றின்

குலை; தாறு: வாழைக் குலை; கதிர்: கேழ்வரகு, 

சோளம் முதலியவற்றின் கதிர்; அலகு அல்லது

குரல்: நெல், தினை முதலியவற்றின் கதிர்; சீப்பு: 

வாழைத்தாற்றின் பகுதி.

கெட்டுப்போன காய்கனி வகை

கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும்

தாவரத்திற்கேற்ப வழங்கும் சொற்கள்:

சூம்பல்: நுனியில் சுருங்கிய கா ய்; சிவியல்:

சுருங்கிய பழம்; சொத்தை: புழுபூச்சி அரித்த 

காய் அல்லது கனி; வெம்பல்: சூட்டினால்

பழுத்த பிஞ்சு; அளியல்: குளுகுளுத்த பழம்;

அழுகல்: குளுகுளுத்து நாறிய பழம் அல்லது

காய்; சொண்டு: பதராய்ப் போன மிளகா ய்.

கோட்டான் காய் அல்லது கூகைக்காய்:

கோ ட ்டான் உட ்கார்ந ்த தினா ல் கெ ட ்ட

காய்; தேரைக்காய்: தேரை அமர்ந்ததினால் 

கெ ட ்டகா ய் ; அல்லி க்கா ய் : தேரை

அமர்ந்ததினால் கெட்ட தேங்கா ய்; ஒல்லிக்காய்: 

தென்னையில் கெட்ட கா ய்.

பழத்தோல் வகை

பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க

வழங்கும் சொற்கள்:

தொலி: மிக ம ெ ல் லிய து; தோ ல் :

திண்ணமானது; தோடு: வன்மையான து; ஓடு:

மிக வன்மையானது; குடுக்கை: சுரையின் ஓடு; 

மட்டை: தேங்காய் நெற்றின் மேற்பகுதி; உமி:

நெல்,கம்பு முதலியவற்றின் மூடி; கொம்மை:

வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி.

மணிவகை

தானியங்களுக்கு வழங்கும் சொற்கள்: 

கூல ம் : நெ ல்,புல் (க ம்பு) முதலியதானியங்கள் ; 

பயறு: அவரை, உளுந்து முத லி யவை ; க ட ல ை: வேர்க ்க ட ல ை ,

கொண்டைக ்கடலை முதலியவை;

 விதை: கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து; 

காழ்: புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து; 

முத்து: வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து; 

கொட்டை: மா, பனை முதலியவற்றின் வித்து; 

தேங்கா ய்: தென்னையின் வித்து; 

முதிரை:அவரை, துவரை முதலிய பயறுகள்.

இளம் பயிர் வகை

தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள்: 

நாற்று: நெல், கத்தரி முதலியவற்றின்இளநிலை ; 

கன்று: மா , புளி, வாழைமுதலியவற்றின் இளநிலை; 

குருத்து: வாழையின் இளநிலை;

பிள்ளை: தென்னையின் இளநிலை;

குட்டி: விளாவின் இளநிலை; 

மடலி அல்லது வடலி: பனையின் இளநிலை; பைங்கூழ்: நெல், 

சோளம் முதலியவற்றின் பசும் பயிர்.

நூல் வெளி

மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநே யப் பாவாணரின் “சொல்லாய்வுக் கட்டுரைகள்“ நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையில் சில விளக்கக் குறிப்புகள் மாணவர்களின் புரிதலுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியபாவாணர், தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்அகரமுதலித் திட்டஇயக்குநராகப் பணியாற்றியவர்; உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.

Post a Comment

0 Comments